மக்களின் கோபமே எங்களுக்கு ஆயுதம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக சார்பாக போட்டியிட்ட மருது கணேஷையே இந்த முறையும் வேட்பாளராக தேர்வு செய்துள்ளார்.

அதன் பின்னர், திமுக வேட்பாளர் மருது கணேஷ்-க்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அறிவித்தார்.

இந்நிலையில், மருது கணேஷ் தனது தேர்தல் வியூகத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். திமுக தலைவர் கருணாநிதி, அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், அரசின் மீதும் ஆட்சியின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். மக்களின் கோபமே எனக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, ஆதரவு அளித்துள்ள தோழமை கட்சிகளுக்கும் நன்றி. இந்த தேர்தலில் பிரச்சாரமே செய்ய தேவையில்லை. ஏனெனில் கடந்த முறையே எல்லா பிரச்சினைகள் பற்றியும் பிரச்சாரம் செய்து முடித்துவிட்டோம். நிச்சயம் வெற்றி பெறுவோம் என மருது கணேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *