Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்

அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்

வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, வாக்களுக்கு பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே, ஆர்.கே.நகரில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

இன்று வெளியிட்ட உத்தரவில், ஆர்.கே.நகரில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம், வீடு வீடாக இரவில் பரப்புரை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீதிகளில் தற்காலிக பூத் அமைக்கவும், அரசியல் கட்சியினர் அமரவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

பணப்பட்டுவாடா தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …