Wednesday , August 27 2025
Home / முக்கிய செய்திகள் / உதயநிதி ஸ்டாலின் படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’.

இந்தப் படத்தை, நேற்று ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் பார்த்துள்ளார் திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின். அவரோடு மனைவி துர்கா ஸ்டாலினும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார்.

படத்தைப் பார்த்தவர், ‘இந்தப்படை வென்றே தீரும்’ எனப் பாராட்டியுள்ளார். ‘உதய்க்குப் பேர் சொல்லும் படமாக இது இருக்கும்’ என துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால், மொத்த டீமும் சந்தோஷத்தில் மிதக்கிறது.

கெளரவ் நாராயணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்க, ராதிகா சரத்குமார், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv