இன்று கமல்ஹாசனுக்கு 63வது பிறந்த நாளாகும். இந்த நாளில் வழக்கம் போல நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருந்தனர் கமல் நற்பணி இயக்கத்தினர்.
ஆனால் மக்கள் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, அதை மாற்றத்துக்கான நாளாக மாற்றுங்கள் என்று தன் ரசிகர்களுக்கு அவர் கூறியுள்ளார். “நாளை என்பது மற்றுமொரு நாளே வேலை கிடக்குது ஆயிரமிங்கே கோலையுங்குடியையும் உயரச் செய்வோம் வேலைவருமெனத் தவமிருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம்,” என்று தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நாளை நான் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடியும் நண்பர்கட்கு… pic.twitter.com/xtxcTV7G6N
— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2017
To those who love me and dislike the idea of my cancelling my birthday celeberations pic.twitter.com/hkSPJj97C9
— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2017