ஒருவருக்கு சனி திசை நடக்கும் சமயத்தில் அவருக்கு பல தும்பங்கள் வரும். ஏழரை சனி என்றால் சொல்லவே தேவை இல்லை. சிலருக்கு சனிபகவானால் தோஷங்கள் இருந்து அதனால் பிரச்சனைகள் வரும். இப்படி சனி பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, சனிபகவானை சாந்தப்படுத்தி சந்தோசமாக வாழ சில எளிய பரிகாரங்கள் இதோ.
தினசரி இரவு தூங்கும் முன்பு சிறிது எள்ளை ஒரு பேப்பரில் மடித்து அதை தலையணைக்கு அடியில் வைத்து படுத்துக்கொள்ள வேண்டும். அடுத்தநாள் காலையில் சிறிது சாதம் எடுத்து அதில் இந்த எள்ளை கலந்து காகத்திற்கு இடவேண்டும். இதை தொடர்ச்சியாக 9 நாட்களோ அல்லது 48 நாட்களோ அல்லது 108 நாட்களோ உங்களது மனதிற்கு ஏற்றது போல் செய்யவேண்டும்.
சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்து பின் உணவு இல்லாமல் பசியால் வாடும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது சிறந்தது.
“ஓம் கிலி சிவ” என்ற மந்திரத்தை 128 முறை 48 நாட்கள் ஜெபித்து வர சனி தோஷம் விலகும்.
சனிக்கிழமைகளில் சனிபகவானின் சன்னதிக்கு சென்று ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி எள் முடிச்சிட்டு திரி போட்டு தீபம் ஏற்றுவது சிறந்தது.
சுத்தமான எள்ளை வறுத்து அதில் வெள்ளம் கலந்து, ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து அதனை சனிபகவானுக்கும், பெருமாளுக்கும் படைப்பது சிறந்தது.
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து பின் அவருக்கு கருப்பு அல்லது நீல நிற வஸ்திரம் சார்த்தி, எள் சாதம் படைத்தது வழிபாட்டு பின் அந்த சாதத்தை பசியால் வாடும் ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பது சிறந்தது