நடிகர் கமல்ஹாசன் அரசின் சில பொறுப்பற்ற செயல்களை குறி வைத்து ட்விட்டரில் கருத்துக்களை அதிரடியாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நிகழ்வுகள் மூலம் களத்திலும் நேரடியாக இறங்கிவிட்டார்.
அவரின் செயல்பாடுகள், அறிவிப்புகளுக்கு சில எதிர்ப்பும் தெரிவித்துவருகிறார்கள். தற்போது அவரின் மீது சில வழக்குகளும் பாய்ந்துள்ளது. நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்கு முடிவுகள் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை என கூறியுள்ளார்.
சென்னையில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கமல்ஹாசன் பாராட்டுக்கள் எனவும், நல்ல குடிமகன் சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் பிரகாசிப்பர் என்றும் கூறியுள்ளார்.
Thanks for going beyond the call of your duty. Good citizens shine with or without uniform. More similar Thamizhan's should report to duty pic.twitter.com/54StA3CEq0
— Kamal Haasan (@ikamalhaasan) 4 novembre 2017
இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை
— Kamal Haasan (@ikamalhaasan) 4 novembre 2017