ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டாயிரம் ராணுவ மையங்களை, நவீனப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக 58 ராணுவ மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து மையங்களும் நவீனப்படுத்தப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி டெல்லியில் தொடங்கிய ராணுவ மாநாட்டில், விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக மாநிலங்களுடன் தகவல் பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும், ராணுவத்தின் உள்கட்டுமானத்தை ஊக்கப்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.