டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே நிலவேம்பு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
கேரள அரசு கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது எனவும் தமிழிசை தெரிவித்தார்.