நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க பொது செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகிய பதவிகளை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அடுத்த நடிகர் சங்க தேர்தல் பற்றி கேட்கப்பட்டது.
அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திமுடிக்கப்படும் என்றும், அதில் நிச்சயம் நானும் போட்டியிடுவேன் என விஷால் அப்போது தெரிவித்தார்.