Tuesday , August 26 2025
Home / முக்கிய செய்திகள் / ‘கெயில்’ திட்டம் ஸ்டாலின் எச்சரிக்கை

‘கெயில்’ திட்டம் ஸ்டாலின் எச்சரிக்கை

‘மீண்டும் கெயில் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய,- மாநில அரசுகள் முயற்சித்தால், விவசாயிகளுடன் இணைந்து, தி.மு.க., போராடும்’ என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில், விளை நிலங்களுக்கு இடையில், ‘கெயில்’ நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிஆகிய, ஏழு மாவட்டங்களில், விளைநிலங்களின் வழியாக, 310 கிலோ மீட்டர் துாரத்துக்கு, 20 மீட்டர் அகலத்தில் செல்லும் எரிவாயு குழாய்கள், சிறு- விவசாயிகளின் எதிர்காலத்தை நசுக்கும்.

எனவே, இத்திட்டத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதை மதிக்காமல், ‘விவசாய நிலங்களின் ஊடாகவே, எரிவாயு குழாய்களைப் பதிப்போம்’ என, மத்திய அரசு கூறுவது, மத்திய, – மாநில உறவுகளுக்கு ஏற்றதல்ல. தமிழகத்தின் உரிமைகளை கோட்டை விட்ட, ‘குதிரை பேர’ அ.தி.மு.க., அரசு, இந்த விவகாரத்திலும் துாங்க கூடாது.விவசாயிகளை பாதிக்கும் வகையில்,

கெயில்திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், மேற்கு மண்டலத்தில் உள்ள, ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து, தி.மு.க., போராடும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv