பிரபல கர்நாடக பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர்களின் செயல்பாடுகள் குறித்து, மவுனமாக இருப்பதன் மூலம் தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற கொடூர சம்பவங்களில் மோடி மவுனமாக இருந்தால், தன்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப அளிக்கவும் தயங்க மாட்டேன் எனவும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.