நடிகர் திலகம், செவாலியே சிவாஜி என தமிழ் சினிமாவில் ஒப்பற்றவராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவரின் மணி மண்டபம் இன்று சென்னை அடையாறில் திறக்கப்பட்டது.
இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என பலர் பங்கேற்றனர். நடிகர் சங்கம் சார்பாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் கமல் பேசிய போது எத்தனை தடைகள் இருந்தாலும், ஒரு ரசிகனாக இங்கு வந்திருப்பேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்த கலைத்துறைக்கும், தமிழக அரசுக்கும், அரசியல்லுக்கும் நன்றி என கூறினார்.
அதே போல ரஜினி பேசியபோது அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும். பெயர், புகழ் மட்டும் போதாது. அதற்கு மேல் என்ன வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியும் அரசியல் சூட்சமங்களை கற்றுத்தர கமல் மறுக்கிறார் என கூறினார்.
https://www.youtube.com/watch?v=ZyPXE7sxyDs