சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசன் மணி மண்டப திறப்பு விழா நடந்தது.
இதில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது,இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள ஓபிஎஸ் அதிர்ஷ்டசாலி. இது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு சிலை வைக்கும் பாக்கியம் பலகோடி பேர்களில் ஒருவருக்குதான் அமையும். அது போன்ற ஒரு பாக்கியம் பெற்றவர் சிவாஜிகணேசன்.
நடிப்பில் புரட்சி ஏற்படுத்தியவர் சிவாஜிகணேசன். சிவாஜியை போல எந்த நடிகரையும் பார்க்க முடியாது.
அரசியலுக்கு வர சினிமா தகுதி மட்டும் போதாது. மக்களுக்கு தெரிந்து இருக்கிறது. என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை. அது கமலுக்கு தெரிந்து இருக்கிறது என்றார்.