ஜெயலலிதா எனக்கு இட்லி ஊட்டிவிட்டாங்க: நடிகை கஸ்தூரி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜெயலலிதா கனவில் வந்து தனக்கு இட்லி ஊட்டிவிட்டதாக நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவர் உடல்நலம் தேறி இட்லி சாப்பிட்டார் என அதிமுக-வின் முக்கிய பிரமுகர்கள் பேட்டியளித்தனர்.

ஆனால் அவர் உயிரிந்த பின்னர் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் பொய் சொன்னோம், நாங்கள் அவரை பார்க்கவே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சிலர் கூறினார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி கிண்டலாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரியிடம் ஒருவர், ஜெயலலிதாவை நீங்கள் பார்த்தீர்கள் என கேட்டார்.

அதற்கு, ஓ பார்த்தேன், தியானம் பண்ணேன். கனவுல வந்து இட்லி சாப்பிட்டாங்க. எனக்கும் ஊட்டி விட்டாங்க என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=ZyPXE7sxyDs

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *