Tuesday , August 26 2025
Home / முக்கிய செய்திகள் / வித்தியாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி – வித்தியாவின் தாய் நெகிழ்ச்சி

வித்தியாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி – வித்தியாவின் தாய் நெகிழ்ச்சி

என்னைப் போன்று இனி எந்தத் தாயும் அழக் கூடாது. என் மகள் வித்தியாவுக்காக கஸ்டப்பட்ட அனைவருக்கும் கண்ணீருடன் வித்தியா சார்பில் நன்றி கூறுகின்றேன்.

இவ்வாறு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீருடன் தெரிவித்தார்.

வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு இன்று தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டது.

அதன்பின்னர் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும் நன்றிகள். கடந்த இரு ஆண்டுகளாக வித்தியாவுக்காகக் குரல் கொடுத்த ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகள்.

அனைவருக்கும் இரு கரம் கூப்பி நன்றிகளைத் தெரிவிகின்றேன். என்னைப் போன்று ஒரு தாயும் இனி அழக் கூடாது. வித்தியாவுக்கு நடந்த கொடுமை யாருக்கும் இனி நடக்கக் கூடாது.

– என்று அவர் குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv