Tuesday , August 26 2025
Home / முக்கிய செய்திகள் / சிவசக்தி ஆனந்தனையும் வியாழேந்திரனையும் பாராட்டுகிறார் நாமல்!

சிவசக்தி ஆனந்தனையும் வியாழேந்திரனையும் பாராட்டுகிறார் நாமல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷ எம்.பி. பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
 
மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் நடந்துகொண்ட விதம் தொடர்பாகவே தனது டுவிட்டர் தளத்தில் அவர் தமிழில் பாராட்டிப் பதிவேற்றியுள்ளார்.
 
“நாடாளுமன்றம் வந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் மாகாண திருத்தச் சட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
 
கூட்டமைப்பில் இருந்துகொண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கும் அவ்விருவருக்கும் கட்சிப் பேதமின்றி பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று அவர் தனது டுவிட்டரில்பதிவேற்றியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=cXTIySR1QUs

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv