மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; ரஜினியையும் இணைத்து கொள்வேன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரஜினியிடம் அரசியல் குறித்து பேசுவேன் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் அண்மைகாலமாக தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் கமல் எப்போது வேண்டும் என்றாலும் அரசியலில் குதிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல், நான் தொழிலுக்காக நடித்து வருகின்றேன்.சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம், அஹிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம் என்று கூறியுள்ளார்.

நான் கட்சி தொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள். நான் அல்ல. அவசரம் இல்லாமல் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். இன்னும் பல மேடைகள் உள்ளன. மக்கள் விரும்பினால் புதிய கட்சி தொடங்குவேன். பிறந்த நாளில் அறிவிப்பு எதற்கு? புரட்சி பிறந்த நாளில் தேதி வைப்போம், நமக்கு வேண்டியது தேதி, ஜோதிடம் அல்ல, நல்ல நாளில் முடிவு செய்வோம். எந்த வருடம் என்பதை கண்டிப்பாக முடிவு செய்வேன்.

அரசியலுக்கு வந்தப்பின் ரஜினியிடம் அரசியல் குறித்து பேசுவேன் எனவும் ரஜினி விரும்பினால் எனது அணியில் இணைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இருந்த போது அரசியல் ஏன் பேச வில்லை என்று தன்னிடம் எல்லோரும் கேட்பதாகவும். அப்போது ஊரே அமைதியாக இருந்ததாகவும் அவர்களுடன் சேர்ந்து தானும் இருந்து விட்டதாகவும் கூறினார்.

https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *