சென்னை: ”தினகரன் ஒரு திருடன்; அவரது வித்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் அவரது பேட்டி: ‘ஊரின் நிலை தெரிந்து உடும்பை தோளில் போட்டானாம் ஒருத்தன்’ என்ற பழமொழி, தமிழக மக்களுக்கு தெரியும். இதற்கு, மதில் ஏறி திருட வந்தவன், மக்களை பார்த்ததும், தான் திருடன் இல்லை எனக்காட்ட, தோளில் கிடந்த உடும்பை காட்டி, வித்தை காட்டினானாம். அது போன்றவர் தினகரன். அவரது வித்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அ.தி.மு.க., ஆட்சியை, ஸ்டாலின், தினகரன் என, யார் வந்தாலும் அசைக்க முடியாது. ஜெயலலிதா சொன்னது போல், இன்னும் நுாறாண்டு காலம், அ.தி.மு.க., ஆட்சி செய்யும். தற்போது, ஸ்டாலின் உச்சகட்ட விரக்திக்கு சென்று, மோசமான வார்த்தைகளால் பேசி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.