Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / கல்லூரி கட்டின ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா?

கல்லூரி கட்டின ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா?

சென்னை : மத்திய அரசை குறை கூறும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக தாக்கி, விமர்சித்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்காக அவர் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளார்.

தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக ஆட்சியில் ஸ்டாலின் தனியார் ஆங்கில பள்ளி கட்டினீர். பொறியியல், மருத்துவக் கல்லூரி கட்டினீர். தண்ணீருக்காக அணைகள் கட்டினீரா? மோடி அரசுக்கு எதிராக கீழடி பற்றி பேசிய ஸ்டாலின், கம்யூனிஸ்டுகள் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கே எதிர்த்தோம்? பொய்யர்களே?

“நீட் தேர்வு”- நம்ப வைத்து கழுத்தறுத்த மத்தியரசு – ஸ்டாலின்…இலங்கை இறுதிப் போரில் போர் நின்றுவிடும் என நம்ப வைத்து சரண் அடைய செய்தது திமுக ஆட்சி. வாரிசு அரசியல் குடும்ப ஆட்சி இதுதானே திமுக, திக, பாமக பேசும் சமூக நீதி ??மக்களை ஏமாற்ற?? இவ்வாறு தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=rVdRyFBCVGc

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …