வாகனங்கள் வைத்திருப்போர் பட்டினி கிடக்கவில்லை : அமைச்சர் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திருவனந்தபுரம்: வாகனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினி கிடக்கவில்லை. வசதியுடன் தான் உள்ளனர் என அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம் கூறி உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயித்துவருகிறது.இந்த முறைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விலைமாற்றத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிம் பேசிய அல்போன்ஸ் கண்ணந்தனம் வா கனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினியாக இருக்க வில்லை . பெட்ரோல் டீசலுக்கான விலையை கொடுக்கும் அளவிற்கு வசதியுடன் வாழ்கின்றனர்.

சமூகத்தில் பின் தங்கிஉள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு தேவையான பணத்தை வரிகள் மூலமே வசூலிக்க முடியும் .எனவே வசதி படைத்தவர்கள் பணம் செலுத்திதான் ஆக வேண்டும் என கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *