வீறுகொண்டு எழுந்த விஜயகாந்த்.. காரைக்குடியில் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த அறிவிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னை: தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30ம் தேதி காரைக்குடியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.09.17 சனிக்கிழமை காலை 8,45 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டடமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான், ஆகிய மாநில கழக செயலாளர்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாவமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்திகளுக்கு நடுவே, பொதுக்குழு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, அக்கட்சி தொண்டர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

https://www.youtube.com/watch?v=NYNtZauSU6Y

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *