தமிழக மக்களை வஞ்சிக்கும் ஆட்சி – விஜயகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மதுரை : ”தமிழகத்தில் மக்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க., ஆட்சி நடக்கிறது,” என மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த கட்சியினர் திருமணவிழாவில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

அவர் பேசியதாவது:ஜெ., இறப்பிற்கு பின், தர்மத்தின் பக்கம் இருப்பதாக தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், பதவிக்காக முதல்வர் பழனிசாமி பின்னால் சென்றுவிட்டார். அவரது கொள்கை எங்கே போயிற்று. ஏழைகளுக்கு உதவாத ஆட்சி நடக்கிறது. வெற்றி பெற்று மக்களை வஞ்சிக்கின்றனர். எனவே தமிழக மக்கள் வரும் தேர்தலில் ஓட்டுக்கள் மூலம் இந்த ஆட்சியாளர்களை வஞ்சியுங்கள், என்றார்.

மகளிரணி தலைவி பிரேமலதா பேசியதாவது:தே.மு.தி.க., மட்டுமே லஞ்ச ஊழலில் சிக்காத கட்சி. இதை கண்டு அ.தி.மு.க. , தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அஞ்சுகின்றன. ஆட்சியில் இல்லாதபோதும் மக்களை தேடிச்செல்கிறோம். நாளை ஆட்சிக்கு வந்த பின்னும் மக்களை தேடி வருவோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. விரைவில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். அவர் தான், லஞ்சம் ஊழலற்ற தலைவராக திகழ்கிறார்.

தண்ணீர் எவ்வளவு கலங்களாக இருந்தாலும், தெளிவு பெறும். அதே போன்று தான் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எச்சூழலிலும் மாறாமல் தண்ணீர் போன்று தெளிவாக இருப்பார். ஓ.பி.எஸ்.,_ இ.பி.எஸ்., அணி, தினகரன் அணி, தி.மு.க., அணி, நீட் போராட்டம் என தமிழகமே கொந்தளித்து வருகிறது. வரும் காலங்களில் மக்கள் விரும்பும் ஆட்சியை தே.மு.தி.க., தரும், என்றார்.

மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கவியரசு, தங்கவேல்சாமி, செல்வக்குமார், பாண்டியராஜ், திருப்பரங்குன்றம் ஒன்றிய நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், முத்துக்குமார் பங்கேற்றனர்.

இரும்புபெண்மணி கதை திருமண விழாவில் பிரேமலதா கதை கூறினார். அதில், உலகில் மனிதர் உட்பட அனைத்து உயிர்களையும் கடவுள் படைத்துவிட்டார். ஆனால் ஒரு உயிரை படைக்க மட்டும், காலதாமதம் செய்து வந்தார். இது குறித்து தேவலோக ரிஷிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கடவுள், புதிதாக படைக்க இருக்கும் பெண், சரித்திரம் படைக்ககூடியவர். அன்பு கொண்டவர். அப்பெண்ணின் இருதயம் இரும்பு போன்று வலிமையானது. அதுபோன்ற பெண்மணியே கணவருக்கு துணையாக இருப்பார். அது போன்று, விஜயகாந்திற்கு துணையாக இரும்பு பெண்மணி போல் கட்சிக்காக நான் இருப்பேன், என்றார்.

https://www.youtube.com/watch?v=NYNtZauSU6Y

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *