தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தே.மு.தி.க.வின், 2017 கழக அமைப்பு தேர்தல் 3-ம் கட்டமாக இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கழக அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கழகத்திற்கும் கழக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள், மாவட்ட கழக செயலாளர், அவைத் தலைவர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், 2 செயற்குழு உறுப்பினர்கள், 5 பொதுக்குழு உறுப்பினர்கள் என தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
4-ம் கட்ட கழக அமைப்பு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=WKchSvPnOXA