காரைக்குடி அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கல்லுக்கட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிலர் கள்ள நோட்டு வைத்திருப்பதாக காவல்துறைக்கு, ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், விடுதியில் சந்தேகிக்கும் வகையில் நடந்து கொண்ட சென்னையை சேர்ந்த சையது பஷீரிடம் சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்தனர்.
https://www.youtube.com/watch?v=AU88D3CdCwg