இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வான் பரப்புக்குள் பிரவேசித்து தேடுதல்களை நடத்தியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டே இலங்கை வான் பரப்பில் பிரவேசித்து தேடுதல் நடத்தியுள்ளதாக இந்திய கடற்படையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கேரளாவின் கொல்லம் கடற்பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை மோதிய கப்பல் ஒன்று தென்திசை வழியாக தப்பிச் சென்றிருந்தது.
குறித்த கப்பலானது ஹொங்கொங்கில் பதிவு செய்யப்பட்ட Ksl Ang Yang என்ற கப்பலாக இருக்கலாம் என்று இந்திய கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த கப்பலை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கொச்சியில் இருந்து 400 கடல் மைல் தொலைவு என்பதனால், டோனியர் விமானங்களை பயன்படுத்தாது நீண்ட தூர கண்காணிப்பு விமானம் ஒன்று தேடுதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையிலேயே, இந்தியக் கடற்படையின் நீண்ட தூர கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வான் பரப்புக்குள் பிரவேசித்து தேடுதல்களை நடத்தியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today