ராஜிதவுக்கு எதிரான பிரேரணை வலுவிழப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்ட ரீதியாக வலுவிழந்த ஒரு பிரேரணையாகக் காணப்படுகின்றது என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கடந்த வியாழக்கிழமை ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பொது எதிரணியால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அறிவித்துள்ளன. அத்துடன், குறித்த பிரேரணைக்கு ஆதரவளிப்போம் என ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த பிரேரணையில் கூறப்பட்டுள்ள 15 முறைப்பாடுகளில் 3 முறைப்பாடுகளுக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், ஏனைய சில குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட ரீதியான காரணங்கள் இல்லை எனவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை  சட்டப் பரீசிலனைக்காக வழங்கப்பட்டபோது சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு  எடுத்துக்கொள்ளமுடியாத நிலையே காணப்படுகின்றது என அறியமுடிகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *