டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை தின்று, இன்று போராட்டம் நடத்தினர்.
வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயிகளின் போராட்டம் 44ஆவது நாளாக இன்று நீடிக்கிறது. நாள்தோறும் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை தின்று, இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
https://www.youtube.com/watch?v=rVdRyFBCVGc