திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி கூறியபடி ஜனநாயக முறைப்படி திமுக ஆட்சியை பிடிக்குமே தவிர கொள்ளைப்புறம் வழியாக அல்ல எனத் தெரிவித்தார்.
குட்கா விவகாரத்தில் திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு வரவிடாமல் தடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் குறுக்கு வழியில் வெற்றிபெற எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
https://www.youtube.com/watch?v=NYNtZauSU6Y