Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது

ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது, அரசியல் குறித்துப் பேசவில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்தார். டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதால், ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “முதலமைச்சரையும், புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன். சட்டப்படி 50 சதவிகிதத்துக்கும் மேல் எம்.எல்.ஏ.க்கள் வெளியே சென்றால்தான் பிளவு. இல்லையென்றால் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம். இந்த 19 பேர் வெளியேறினாலோ அல்லது கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தாலோ அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம்.

இதனால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” என்று கூறினார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …