Sunday , February 2 2025
Home / முக்கிய செய்திகள் / சின்னம்மா சொல்லுறவுங்களுக்குதான் என் ஓட்டு

சின்னம்மா சொல்லுறவுங்களுக்குதான் என் ஓட்டு

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆளும் அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர்

நடிகர் கருணாஸ், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து தினகரனிடம் எதுவும் பேசவில்லை. அவர் சிறையிலிருந்து வந்த பிறகு நான் சந்திக்கவில்லை என்பதால் மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன். என்னைப் பொருத்தவரை எனக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்க வேண்டும் என்று அம்மாவிடம் பரிந்துரைத்ததே, சின்னம்மாதான். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில், அவர்கள் யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறார்களோ அவர்களுக்குதான் என் ஓட்டு. எனவே எங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை விரைவில் டிடிவி தினகரன் அறிவிப்பார்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அம்மா அணி, ஏற்கனவே பாஜக வேட்பாளரை ஆதரித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து கருணாஸ் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv