Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சுமந்திரன் மீதான கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சுமந்திரன் மீதான கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்குடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலை நீடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே அவர்களுக்கு தொடர்ச்சியாக விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …