ராஜபக்ஷர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதகதியில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவர் உட்பட அவரின் குடும்பம் மற்றும் ஆட்சியின் பங்குதாரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்மோசடிகளை அரசு துரித கதியில் முன்னெடுக்க சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

நல்லாட்சி அரசு அமைய பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை முன்னாள் அரசின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் ஒன்ரேனும் முற்றுப்பறவில்லை. ஐ.தே.கவின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொடுத்த கடும் அழுத்தத்தின் பேரில் விசாரணைகள் அனைத்தும் துரித்தப்படுத்தப்பட்டுள்ளன.

சிலரின் நடவடிக்கைகளால் முன்னாள் அரசின் காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகள் பொது சொத்து இழப்புகள் குறித்து மக்களுக்கு தெரியாமல் போகக் கூடும். நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் அது பாரதூரமான விடயமாக மாறிவிடும் என்றும் பிரமருக்கு எடுத்துரைக்கப்பட்டதாலலேயே விசாரணைகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *