திலக் மாரப்பனவுக்கு பதில் வெளிவிவகார அமைச்சர் பதவி?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நேற்று விலகியதை அடுத்து, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் நிலவுகின்றன.

ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலை அடுத்து வெளிவிவகார அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் நியமிக்கப்படும் வரையில், இந்த அமைச்சை சிறிலங்கா அதிபரே கவனித்துக் கொள்வார்.

அதேவேளை, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு கலாநிதி சரத் அமுனுகமவின் பெயரும் அடிப்பட்டது.

எனினும், திலக் மாரப்பனவுக்கே அந்தப் பதவி வழங்கப்படலாம் என்று தற்போது கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *