Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வித்தியா கொலை வழக்கு: விஜயகலாவிடம் விசாரணை

வித்தியா கொலை வழக்கு: விஜயகலாவிடம் விசாரணை

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) மாலை பல மணிநேரங்கள் விஜயகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை அறிக்கை, எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த வழக்கு விசாரணையின் போது, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

மாணவி வித்தியா கொலையுண்ட பின்னர், சுவிஸ்குமாரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்த போது, அங்கு சென்ற விஜயகலா அவரை விடுவிக்குமாறு கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கின் மற்றுமொரு அரசியல்வாதியிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர், கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …