கடற்படையினர் வெளியேற வேண்டும்: மீனவர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமது பூர்வீக பூமியான இரணைதீவை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அங்கிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்லவேண்டுமென இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அருகிலுள்ள அரச காணிகளில் கடற்படையினர் குடியிருப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும், தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி என்ற மீனவர் குறிப்பிட்டுள்ளர்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், எமது ஆதவன் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது பூர்வீக நிலத்தை மீட்பதற்காக இரணைதீவு கடற்படை முகாமிற்கு எதிரில் முகாமிட்டு, கடந்த 100 நாட்களாக இரணைதீவு மக்கள் போராடி வருகின்றனர்.

இம் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில், இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *