செப்டம்பரில் உலகம் அழிந்து விடும் : பிரபல ஆராய்ச்சியாளர் பரபரப்புத் தகவல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மேடி (David Meade) என்ற விஞ்ஞான ஆராய்ச்சியாளர் பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஓகஸ்ட் எனவும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பூமியில் இடம்பெறும் நிகழ்வுகளை வைத்து எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் சம்பவங்களை கணிப்பதில் வல்லவரான இவர் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் ஒகஸ்ட் மாதம்தான் மனிதர்களின் கடைசி மாதம் எனவும், செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும் எனவும் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணத்திற்கும் உலக அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

விண்வெளியில் சுற்றி வரும் நிபுரு (Nibiru) எனப்படும் விண்கல் இந்த ஓகஸ்ட் மாதத்தில் எந்த நாளிலும் பூமியில் மோதும் என்பதற்கான அறிகுறி தான் இந்த சூரியக் கிரகணம்.

பைபிளில் குறிப்பிட்டது போல இந்த சூரியக் கிரகணம் தோன்றும்போது பூமியின் பெரும்பாலான பகுதி இருட்டாகக் காணப்படும். விண்வெளில் தோன்றும் சந்திரனும் கருப்பு சந்திரன் என அழைக்கப்படும்.

இதற்கு சில உதாரணங்களையும் குறிப்பிட முடியும். சூரிய கிரகணமானது ஒவ்வொரு 33 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்றது.

கிறித்துவ கடவுளின் பெயரான Elohim என்ற வார்த்தை பைபிளில் 33 இடங்களில் குறிப்பிடப்படுகிறது. சூரிய கிரகணமானது ஓரிகோன் மாகாணத்தில் உள்ள லிங்கன் கடற்கரையில் தோன்றுகிறது. இந்த ஓரிகோன் மாகாணம் அமெரிக்காவின் 33வது மாகாணம் ஆகும்.

இந்த மாகாணமானது தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லிடன் நகர் எல்லைக்கு 33 டிகிரி தூரத்தில் அமைந்துள்ளது.அதே சமயம், கடைசியாக இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் கடந்த 1918ம் ஆண்டில் நிகழ்ந்தது. அதாவது. 99 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது.

மேலே குறிப்பிட்ட 33 என்ற எண்களை மூன்று முறை கூட்டினால் வரும் எண்கள் தான் 99. எனவே, இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் ஓகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம் என்பதில் சந்தேகமில்லை என டேவிட் தெரிவித்துள்ளார்.

எனினும் டேவிட்டின் இந்த கணிப்பு தவறானது எனவும், இதுபோன்று கணிப்புகள் ஏற்கனவே நடத்தப்பட்டு அனைத்தும் பொய்த்துப் போயுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *