கமல்ஹாசனின் அரசு மீதான ஊழல் குறித்த விமர்சனத்தை நான் வரவேற்கிறேன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தனது படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இம்மாதம் 11 ஆம் தேதி வெளிவரவுள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி நிவேதா, நடிகர்கள் பார்த்திபன், சூரி மற்றும் இயக்குனர் தளபதிபிரபு ஆகியோர் சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு சலுகை பெறும் விஷயத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பழிவாங்கப்பட்டேன் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்று ஒவ்வொரு படத்திற்கும் வரிவிலக்கு பெற்றதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

கமல்ஹாசனின் ஊழல் குறித்த விமர்சனத்தை தான் வரவேற்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *