டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா) டி.வி. நரேந்திரனின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.8.17 கோடியாக இருக்கிறது.
முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 11.87 சதவீதம் உயர்வாகும். 2105-16-ம் நிதி ஆண்டில் ரூ.7.3 கோடியாக இவரது சம்பளம் இருந்தது.
குழும செயல் இயக்குநர் கவுசிக் சாட்டர்ஜியின் சம்பளம் 10.06 சதவீதம் உயர்ந்து ரூ.8.09 கோடியாக இருக்கிறது.
கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் முக்கியமான உயரதிகாரிகளின் சம்பளம் பெரிய அளவில் உயரவில்லை என டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.