கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு. க எம் .பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் […]
Tag: தமிழகம்
இன்றுடன் அடங்குகிறது அனல் பறந்த பிரச்சாரம்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி மற்றும் ஒரு சட்டசபை தொகுதிக்கும் எதிர்வரும் 18 ஆம் திகதி வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 845 பேர் […]
அமித்ஷாவால் மழை பெய்தது…குளத்தில் தாமரை மலரும் : தமிழிசை நம்பிக்கை
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகையால் தான் தமிழகத்தில் மழை பெய்தது என்றும் அந்த மழை நீரில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும், மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும் அமித்ஷா நேற்று சென்னைக்கு வந்தார். விமான நிலையத்திலிருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு […]
ஆளுநரை சந்தித்த பூரிப்பில் முதல்வர்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் […]
மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசு அதிரடி முடிவு
வரும் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு 6 வாரத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உச்ச நீதிமன்ற கொடுத்த காலக்கெடு இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. தமிழக அரசு மற்றிம் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய […]
புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்தை ஏற்காதவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது” என்று கூறினார். இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. […]
ரூ. 19,592.58 கோடி பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) கட்டுவதில் தமிழகம் இராண்டாவது இடம் பிடித்திருப்பதாக தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஒரே நாடு ஒரே வரி என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி திட்டத்தை பலர் எதிர்த்து வந்தாலும் இது ஒரு சட்டமாக அமல்படுத்தப்பட்டுவிட்டதால் அனைவரும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றனர். இந்த ஜி.எஸ்.டி, வரியில் 50 சதவீதம் […]
சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி கொளத்தூரில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. சரியான முன்னறிவிப்பின்றி, பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் […]
தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்த நடிகர் ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் நிலைப்பாடு என்ன என பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் காவிரி பிரச்சனை வந்தபோது நடிகர் ரஜினி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது விமர்சிக்கப்பட்டது. தற்போது அரசியலில் இறங்கியுள்ள ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என கேள்வி […]
விண்வெளியிலிருந்து பார்த்தா தமிழகம் புகை மூட்டமா இருக்காம்!
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலே போகிப்பண்டிகை. இதனால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை முற்றத்தில் வைத்து தீயிட்டு எரிப்பது வழக்கம். தீயிட்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் முதலியவற்றை தீயிட்டு எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் அதை செய்யத்தான் செய்கிறார்கள். நகரங்களில் போகிப்பண்டிகையின் போது காற்று மிகப்பெரிய […]




