வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனவைரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், “ஒரு சம்பவம் நீதிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமாயின் …
Read More »நிலைப்பாட்டை வெளியிட்டது த.தே.கூ.
ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் …
Read More »வடக்கு மாகாண தமிழரசுக் கட்சியினரை அவசர கூட்டத்துக்கு இன்று கொழும்புக்கு சம்பந்தன் அழைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் அமைச்சரவை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரையும் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறும் அவசர கூட்டமொன்றில் பங்குபற்றுவதற்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைத்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா சார்பில் அவரது செயலாளர் இந்தக் கூட்டம் தொடர்பான …
Read More »மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சியைக் கவிழ்க்க தென்னிலங்கையில் சதி! -கூட்டமைப்பு குற்றச்சாட்டு
“தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசுடன் நாம் தொடர்ந்து பேசிவருகின்றோம். இந்நிலையில், இந்த ஆட்சியைக் கவிழ்க்க தென்னிலங்கையில் சதி முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்முதல் அரசியல் பிரச்சினைகள்வரை அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும், …
Read More »யாழில் முப்படைகள் களமிறக்கப்படுவதை ஏற்கவே முடியாது! – கூட்டமைப்பு திட்டவட்டம்
“யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களைக் காரணங்காட்டி முப்படைகளைப் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறியிருந்தார். அது தொடர்பில் கருத்துத் …
Read More »வடக்கின் 4 அமைச்சர்களையும் ஒரேயடியாக நீக்கினால் விக்கியும் தனது அமைச்சு பொறுப்புகளை துறக்கவேண்டும்! – மாவை வலியுறுத்து
“வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். வரம்பு மீறிச் செயற்படும் அவரின் இந்த நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க குற்றவாளிகளான இரு அமைச்சர்களை மட்டும் அவர் பதவிநீக்கம் செய்து புதியவர்களை நியமிக்கவேண்டும். இதைவிடுத்து குற்றவாளிகளுடன் நிரபராதிகளான அமைச்சர்களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றினால் அவரும் தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடன் துறக்கவேண்டும். புதியவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் …
Read More »இரண்டு மாதங்களுக்குள் மயிலிட்டியை விடுவிப்பதாக தேசிய அரசு உறுதி! – மாவை எம்.பி. தெரிவிப்பு
“வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டிப் பிரதேசம் 2 மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும் என்று தேசிய அரசு உறுதி வழங்கியுள்ளது.” – இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்இதார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மீள்குடியேற்றம் விடயம் குறித்துப் பேசப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “வலிகாமம் வடக்கு …
Read More »காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: இரு வாரங்களில் தீர்வு கிடைக்கும்? – முயற்சிப்போம் என்கிறார் மாவை
“நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு வாக்களித்தோம். ஆனால், அந்த விடயங்கள் எவையும் உருப்படியாக நடைபெறவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால் அது நல்லாட்சி அரசாக இருக்க முடியாது. கடந்த அரசில இடம்பெற்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறக் கூடாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வு ஒன்றைப் பெற்றுத்தர முயற்சி செய்கின்றோம்.” …
Read More »நல்லாட்சியில் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் மிகவும் குறைவு: மாவை
நல்லாட்சியில் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் மிகவும் குறைவு: மாவை தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ‘ஐனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. …
Read More »தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள மாவை
தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்: ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள மாவை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் காலவரையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் …
Read More »