முல்லைத்தீவை வாட்டியெடுக்கும் வறட்சி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரவித்துள்ளார்.

மாவட்டத்தின் 136 கிராம சேவகர் பிரிவுகளில், 135 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வறட்சி காரணமாக முல்லைத்தீவு மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, விவசாய நடவடிக்கைகள் குன்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக 34,000 ஏக்கர் காணி, பயிர்செய்கைக்கு ஒவ்வாத வகையில் வறண்டு போயுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட கிணறுகளின் நீரும் வற்றி வருவதாக தெரிவித்த மாவட்டச் செயலாளர், இந்நிலை நீடித்தால் மக்கள் பாரிய அளவில் துன்பத்திற்கு உள்ளாவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *