வறட்சி காரணமாக இலட்சம் பேர் பாதிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதேவேளை, வறட்சியான காலநிலையுடன் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழுள்ள 14,000 இற்கும் அதிகமான குளங்கள் வற்றியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திள் நீர் முகாமைத்துவ பிரிவின் தலைவர் பிரபாத் விதாரண கூறினார்.

தமது திணைக்களத்தின் கீழுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 21 வீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ், வறட்சியால் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இறுதிக்கட்ட இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *