யாழ். கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு 233 பேர் இன்று அழைத்து செல்லபட்டனர்!
கொடிகாமம் 522 ஆவது பிரிகெட் படை முகாமில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு 233 பேர் நேற்று அழைத்து செல்லபட்டனர். அவர்கள் இந்தியாவுக்கு யாத்திரிகையர்களாகச் சென்ற பிக்குகள் உள்ளிட்ட 233 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்காக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
8 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட அவர்கள் இன்று நண்பகல் கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்குரிய உணவு மற்றும் மருந்து வழங்கள் உள்ளிட்டவற்றை இராணுவ சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உரிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் 500 பேரை தங்கவைக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…!
-
ஊரடங்கு தொடர்பில் வெளியான விசேட அறிக்கை…!
-
யாழில் இனங்காணபட்டுள்ள கொரோனா நோயாளி
-
இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!
-
இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்
-
பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!
-
கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்
-
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன