Monday , June 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்

இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்

இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்

காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடியிருக்கப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறித்தலின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்கள பணிப்பாளர் ஆரியதாஸ போதரகம குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் உபாயமாக அரசாங்கம் மேற்கொள்ளும் செய்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய செயற்படாத மதுபான விற்பனை நிலைய அனுமதிப்பத்திரதாரிகள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பில், 1913 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு, மதுவரித் திணைககள தலைமையகத்தின் சிறப்பு செயற்பாட்டு பிரிவிற்கு அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்க்பபட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv