Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!

கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா அபாயம் மிக்க மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த மாவட்டங்களில் மீள் அறிவிப்பு வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிவரை நீடித்தது.

இன்று காலை 6 மணியிலிருந்து தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வெள்ளிக்கிழைமை 27 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றும் அபாயம் அதிகம் காணப்படுவதால் குறித்த மூன்று மாவட்டங்களும் கொரோனா அபாயம் மிக்க மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவினை நீடிக்கவும் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv