தெற்கு அந்தமான் தீவுப் பகுதியில் – இலங்கையிலிருந்து ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று மாலை நிலைகொண்டிருந்தது. இது எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் வங்காள விரிகுடா வழியாக இந்தியாவின் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை காணப்படும். கடல் பகுதியில் […]
முக்கிய செய்திகள்
Head News
மைத்திரி, மகிந்த ஆதரவு அணிகள் மீளவும் சந்திப்பு!
மைத்திரிபால சிறிசேன ஆதரவு அணியும், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியும் இன்னுமொரு தடவை பேச்சு நடத்தவுள்ளன என்று அறிய முடிகின்றது. இரு அணிகளும் முன்னர் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. சில பௌத்த பிக்குகள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இரு அணிகளும் இன்று சந்தித்துப் பேசவுள்ளன என்று தெரியவருகின்றது. இந்தச் சந்திப்பு வெற்றியளிக்கும் சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்று கட்சித் தகவல்கள் தெரிவித்தன.
யாழில் வாள்வெட்டு இரு இளைஞர்கள் படுகாயம்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீசாலை கிழக்கு – மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த அறுவர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு கடைக்கும் சேதம்விளைவித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது மீசாலை கிழக்கைச் சேர்ந்த செல்வராசா கஜவதனன் (20) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார். […]
இறுதி முடிவு எடுக்க இன்று கூடுகிறது கூட்டமைப்பு.!
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடவுள்ளது. குறித்த கூட்டமானது யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் நேற்று முன்தினம் பிற்பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆசனப்பங்கீடு தொடர்பில் […]
”பரீட்சைகள் நடைபெறுவதில் மாற்றமில்லை”
சீரற்ற காலநிலை காரணமாக இவ் வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை யில் எந்த வித மாற்றங்களும் இடம்பெறாது என பதில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத்பூஜித தெரிவித்துள்ளார். க.பொ.த.சாதாரண தர பரீட் சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் இவற்றிற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை. எனவே க.பொ.த சாதாரண தர பரீட்சை குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் […]
ஆர்.கே.நகரில் ஒரே நாளில் தாக்கலான 101 வேட்புமனுக்கள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மனுதாக்கல் செய்தவர்களின் நடிகர் விஷால் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று வேட்புமனுதாக்கல் செய்த 101 பேர்களையும் சேர்த்து மொத்தம் 131 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர். […]
தமிழ்குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடா.
ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். போரின் போது கிழக்கு மாகாணத்தில் […]
கிளிநொச்சி துயிலும் இல்லம் பூங்கா ஆனது!
அண்மையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்ட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயர் பலகை ஒன்று காணப்பட்டது. குறித்த பெயர் பலகையை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாற்றியுள்ளதாக தெரியவருகிறது! இதனால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இது குறித்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த பெயர் பலகை கரைச்சி பிரதேச சபையினால் தான் நாட்டப்பட்டது […]
இன்றைய ராசிபலன் 05.12.2017
மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கடந்த 2 நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். முகப்பொலிவுக்கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். […]
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவு சமர்ப்பிப்பு
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயத்துக்காக முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 தொகுதிகள் அந்தவகையில் முன்மொழியப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம்–தீவகம் ஒன்றிணைக்கப்பட்ட தொகுதியாக முன்மொழிவு சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மாகாணசபைகள் எல்லை நிர்ணயக் குழுவுக்கு சில நாள்க ளுக்கு முன்னர் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பி டப்பட்டுள்ளதாவது: மாகாண சபைத் தேர்தலின் புதிய திருத்தத்துக்கு அமைய 50 வீதம் தொகுதி வாரியாகவும் 50 […]





