முக்கிய செய்திகள்

Head News

யாழ்ப்­பா­ணத்­தில் 2ஆவது சுயேச்சை களத்தில்!

யாழ்ப்­பா­ணத்­தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு இரண்­டா­வது சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சுயேச்­சைக் குழுக்­கள் கட்­டுப் பணம் செலுத்தி வரு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­தில், சங்­கானை பிர­தேச சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக்­குழு கட்­டுப் பணம் செலுத்­தி­யி­ருந்­தது. இந்த நிலை­யில் வல்­வெட்­டித்­துறை நகர சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. மேலும், சாவ­கச்­சேரி நகர சபைத் […]

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வு 16-ந் தேதி பதவி ஏற்கிறார்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்தார். இதனால், புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 4-ந் தேதி […]

கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் முதல் அமைச்சர் பழனிச்சாமி

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மாயமான மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சின்னத்துறை பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களை முதல் அமைச்சர் சந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்று முதல் அமைச்சர் பழனிச்சாமி […]

ஓகி புயல், மீனவர் பிரச்சனை

தமிழகத்தின் குமரி மாவட்டத்தை மிகவும் கடுமையாக தாக்கியது சமீபத்தில் வந்த ஓகி புயல். இந்த புயலின் தாக்கத்தால் பல உயிர்களை பலிகொடுத்து அதிலிருந்து இன்னமும் மீளாமல் உள்ளனர் அந்த பகுதி மக்கள். ஆனால் இந்த பிரச்சனையில் தற்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மத சாயம் பூசியுள்ளார். பல ஆயிரம் பேர் இந்த புயலால் காணாமல் போய் உள்ளனர், பல நூறு பேர் இறந்துள்ளனர். பலரும் தங்கள் உடமைகளை இழந்து […]

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை, 5 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்றைய ராசிபலன் 12.12.2017

மேஷம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள். […]

பூமியின் சுழற்சி வேகம் குறைவு?

பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதாக அமெரிக்காவின் கொலரடோ பௌல்டார் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளர் ரோஜார் பில்ஹாம் மேற்கொண்ட ஆய்விலும், ரெபேக்கா பென்டிக் பல்கலைக்கழகத்தின் மொன்டானா ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. அதாவது பூமியின் சுழற்சி வேகத்தில் மிக மிக குறைந்த அளவில் (ஒரு நாளில் ஒரு மில்லியன் செகண்ட்) மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு கீழேயான ஆற்றல் அதிகாரித்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் 2018 ஆம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை […]

ஆர்.கே.நகரில் 500 குக்கர்கள் பறிமுதல்

ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் வேன் ஒன்றில் இருந்து 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தினகரன் பெரிதும் எதிர்பார்த்த தொப்பி சின்னம் அவருக்கு கிடைக்காமல் போனது. அதற்கு பதில் தேர்தல் ஆணையம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியது. தேர்தல் நடத்தை […]

தொண்டமான் மகனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு.!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமானை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு ஹட்டன் நீதவான் நீதிபதி எஸ்.சரவணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம். ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக சென்ற வேளையில் அவர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். […]

வேட்புமனு நிராகரிப்பால் விஷால் எடுத்த அதிரடி முடிவு..! ரஜினி, கமலை எல்லாம் மிஞ்சி விட்டார்…!!

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள சென்னை ஆர்கே நகர் தேர்தல் வரும் வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஷால் மனுதாக்கல் செய்தார். ஆனால் நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கவிருக்கிறேன் என்று அறிவித்தார். அதனையடுத்து யாரையும் ஆதரிக்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டார். எனவே இவர் விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஷால் சமீபத்தில் அவர் […]