ஈரானில் நிலநடுக்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தென்மேற்கே மெஷ்கிண்டாஷ்ட் நகர் அமைந்துள்ளது.

இங்கு 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்நிலநடுக்கம் தெஹ்ரான் உள்பட ஈரானின் வடக்கே பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.

கடந்த நவம்பரில் மேற்கு ஈரானில் 7.2 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *