சினிமா செய்திகள்

5 வயதில் நானும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டேன்

என்னைப்போல் நிறைய பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சிறுமி ஆசிபாவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடிகைகள் உள்பட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- நானும் சிறுவயதில் பாலியல் […]

ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா விருதுகளில் குழப்பம்

ரன்வீர் சிங்கும், அனுஷ்கா சர்மாவும் இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். ரன்வீர் சிங் சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்து இருந்தார். இவருக்கும் தீபிகா படுகோனேவுக்கும் காதல் என்றும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் பேச்சு உள்ளது. அனுஷ்கா சர்மா கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் தாதா சாகிப் பால்கே விருதுக்கு தேர்வு […]

சண்டை போட்ட அபர்ணதிக்கு மட்டும் ஆர்யா செய்த ஸ்பெஷல் விஷயம்

நடிகர் ஆர்யாவின் திருமணத்திற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ நடந்துவருகிறது. அதில் இருந்து அபர்ணதி இன்று வெளியேற்றப்பட்டார். ஆர்யாவின் இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணதி ஆர்யாவிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். என்னை ஏன் போக சொல்கிறீர்கள் என காரணத்தை சொல்லுங்கள் என ஆர்யாவிடம் சண்டை போட்டார். அதற்கு ஆர்யா, “உன்னை இதற்கு மேலும் எடுத்து சென்று மேலும் காயப்படுத்த விரும்பவில்லை. உன்னை என்னோட மனைவியாக என்னால் […]

பிரபாகரன் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கினார் ஆர்யா!!

எங்க வீட்டு மாப்பிள்ள நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஜெய்ப்பூரில் முழுக்க முழுக்க படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாம். இறுதி கட்டத்தை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு ஆர்யா போட்டியாளர் சுஸானாவுடன் சென்றார். ஈழப்பிரச்சனை, பிரபாகரன், முள்ளிவாய்க்கால் தொடர்பாக பேசவே கூடாது என்ற நிபந்தனைகள் ஆர்யாவுக்கு விதிக்கப்பட்டது. அத்துடன் மாற்று உடையில் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இந்த […]

நடிகர் சங்க போராட்டத்தில் உடன்பாடு இல்லை

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சனைகளுக்காக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இன்று காலை அரவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சிம்பு பங்கேற்கவில்லை. காலை 9 மணி அளவில் துவங்கி சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிம்பு பேசியது பின்வருமாறு… மவுன போராட்டம் செய்வதில் எந்த விதமான உடன்பாடும் இல்லாததால் திரையுலகினர் நடத்திய […]

விஷாலுக்கு இந்த தைரியம் இருக்கா? பிரபல திரையரங்க உரிமையாளர் விளாசல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மட்டுமல்ல நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பதவி வகித்து வருகிறார் விஷால். இவர் தற்போது திரையரங்கத்தில் புரெஜெக்டருக்கான Qubeக்கான செலவை தயாரிப்பாளர்கள் ஏற்க முடியாது என்று ஸ்ட்ரைக்கை அறிவித்தார். இதில் திரையரங்கத்துக்கு பல்வேறு கோரிக்கை வைத்தார். இதுபற்றி பிரபல ரோகினி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் கூறுகையில், விஷாலின் முட்டாள்தனத்தால் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சாத்தியமில்லாத கோரிக்கை வைத்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார். […]

விஸ்வாசம் படத்தில் இணையும் புதிய பிரபலம் யார் தெரியுமா?

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் விஸ்வாசம் படத்தில் நடிகர் போஸ் வெங்கட் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் […]

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுக்கு வாழ்க்கை துணையாகப்போவது இவர் தானாம்!

பல தடைகளுக்கு நடுவே ஆர்யா பங்குபெறும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நிறைவை எட்டிக்கொண்டிருக்கிறது. அவருக்கு ஜோடியாக போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது. தற்போது இருக்கும் போட்டியாளர்களில் அபர்னதிஎல்லா விசயங்களையும் மிகவும் ஓப்பனாக பேசக்கூடியவர். இப்படியானவர்களுக்கு பேசும் விசயங்களே பிரச்சனையாக முடியும் என்பதால் அவர் அவுட் என்கிறார்கள். அதே போல அகாதா போலியாக இருக்கிறார் என ஏற்கனவே இதிலிருந்து வெளியே போனவர்கள் சொல்லிவிட்டார்கள். இதனால் இவருக்கும் வாய்ப்பு குறைவு. அதே வேளையில் சுஸானா இலங்கையிலிருந்து வந்தவர். அண்மையில் அவருடன் […]

ரஜினிக்கு ஜோடியாகக் போகும் த்ரிஷா?

ரஜினியை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை த்ரிஷா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகிற்கு இறைவி, பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ‘மெளனம் பேசியதே’ மூலம் 2002ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ள த்ரிஷா, […]

பிக்பாஸ் சினேகனின் எதிர்பாராத அதிரடி அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். கட்டிப்பிடி வைத்தியம், 100 சதவீதம் என பல தனிப்பட்ட வார்த்தைகளால் ட்ரண்டானவர். அவர் பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். சில படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் கமல்ஹாசன் மதுரையில் கட்சி தொடங்கியபோது சினேகன் கலந்துகொண்டார். அண்மையில் அவர் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவரிடம் உங்கள் தொகுதிக்காக தேர்தலில் நிற்பீர்களா என கேட்டதற்கு கமல் சார் சொன்னால் நான் ரெடி. […]