விசுவமடு புதிய புன்னை நீராவியடிப் பகுதியில் கால் நடைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் வயல்நிலங்களில் தமது கால்நடைகளை மேய்ச்ச லுக்காக அனுப்பி விடுகின்றார்கள். இதனால் நெற்பயிர்களைக் கால்நடைகள் மேய்கின்றன. வயல் நிலங்கள் அழிவடைந்து செல்கின்றன. கால்நடை உரிமையாளர்களுக்குத் தெரியப்படுத்தியும் அவற்றைக் கட்டுப்படுத்த எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என வயல்நில உரிமையாளர்கள் தெரிவித்தனர். புன்னைநீராவியடிப் பகுதியில் 30 ஏக்கர் …
Read More »யாழில் டிப்பர் மோதி குடும்ப பெண் பலி.
யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 4:00மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், கணவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. சாவகச்சேரியில் இருந்து கொடிகாமம் நோக்கி வயோதிப தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் வீதியின் ஓரத்தில் நின்ற காரின் சாரதி கார் கதவினை திடீரென திறந்த போது …
Read More »நீண்டகாலம் சீரமைக்கப்படாத மின்னங்கட்டுப்பாலம்!
மன்னார் மாந்தை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கள்ளியடிக் கிராமத்துக்குச் செல்லுகின்ற மின்னங்கட்டுப்பாலம் நீண்டகாலமாக சீரமைக்கப்படாது இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த பாலம் சீரமைக்கப்படாது காணப்படுவதால் அதனூடாகப் பயணிக்கும்போது சிரமத்துக்குள்ளாகும் நிலையில், தற்போது மழைநீரும் தேங்கி நிற்பதால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். மண்டக்கல்லாறு, அருவியாறுப் பாலங்கள் தொடர்ச்சியாக சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மின்னங்கட்டுப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் இதுவரை இடம்பெறவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே …
Read More »ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »முல்லைத்தீவு கடற்கரை மயான அமைதியில்
முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அப்பால் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகள் ஆளரவமற்று அமைதியாகக் காட்சியளிக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »நமசிவாயம் குமாரதாசன் (ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்)
சரசாலையைப் பிறப்பிடமாகவும் கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் குமாரதாசன்(ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்) 04.12.2017 திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் – தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் – பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற தவறஞ்சிதமலரின் (றஞ்சியக்கா) அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, முத்துச்சாமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற தனபாலசிங்கத்தின்(JP), அன்பு மைத்துனரும் நிரஞ்சனாவின் …
Read More »சுப்ரமணியம் பாலசிங்கம்
மட்டுவில் தெற்கு. சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாலசிங்கம் நேற்று (05.12.2017) செவ்வாய்க் கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் – சிவபாக்கியம் தம்பதி யரின் அன்பு மகனும் செல்லத்துரை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மரு மகனும் தேவிமலரின் அன்புக் கணவ ரும் காலஞ்சென்ற உதயபாலன், உதய குமார் (சுவிஸ்), உதயசீலன் (சுவிஸ்), காலஞ்சென்ற உதயராஜன், உதய காந்தன் (காந்தன் – மட்டுவில்) ஆகியோ ரின் அன்புத் …
Read More »வல்லி மகேந்திரன் (முன்னைநாள் தலைவர் கலிகைக் கந்தன் ஆலய பரிபாலனசபை)
காந்தி வீதி, துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்லி மகேந்திரன் (JP) 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லி – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதி – பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவமலரின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இராசதுரை, ரங்கநாதன், இராசேந்திரம், இராசு, சிதம்பரநாதன், திருமதி சந்திரலிங்கம் வசந்தி, சிவநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும், மதன் (UK), மதனா (ஆசிரியை – யா/ …
Read More »சின்னப்பு குணரத்தினம்
விக்கினேஸ்வரா வீதி, தையிட்டியை பிறப்பிடமாகவும் மானிப்பாய் வீதி, சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு குணரத்தினம் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும் வசந்தலீலாவின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான ராசரத்தினம், மகேஸ்வரி, விஜயரட்ணம் மற்றும் நவரத்தினம், அழகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் சத்தியசீலன், மலர் ஆகியோரின் மைத்துனரும் அரவிந்தன், இளவேந்தன்(பிரான்ஸ்), வக்சலா, சசிகலா(லண்டன்) …
Read More »நாளை கமல்-விஷால் சந்திப்பு: பிரச்சாரம் செய்வாரா?
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷாலின் வேட்புமனு ஒருவழியாக ஏற்கப்பட்டுள்ளதால் விஷாலும் தற்போது களத்தில் உள்ளார். இரண்டு பாரம்பரியமான திராவிட கட்சிகளை கதிகலங்க வைத்தபோதே விஷால் பெயரளவில் வெற்றி பெற்றுவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நாளை கமல்ஹாசனை சந்திக்கவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன், விஷாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா? என்பது குறித்து தெரியவரும் மேலும் ‘மக்களுக்கு நல்லது செய்வதற்கு இடையூறு வரும் என …
Read More »